பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் 9-ம் தேதி முதல் 8 நாட்கள் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் ஏப்ரல் 9ம் தேதி பிரான்ஸ் செல்லும் மோடி, அங்கிருந்து 12ம் தேதி ஜெர்மனிக்கு புறப்படுகிறார். பின்னர் அங்கிருந்து கனடா சென்று அங்கு 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது வெளிநாட்டு முதலீடுகளை பெறுதல் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக அந்நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் .

மோடியின் இந்த சுற்றுப் பயணத்தில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுடனான தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்வது மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

Leave a Reply