ஜன் தன் திட்டத்துக்கு அடுத்ததாக, மூன்று மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத் தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கப்படும் இத்திட்டங்களில் 2 காப்பீட்டு திட்டங்களும், ஒரு ஓய்வூதியதிட்டமும் இடம்பெறுகின்றன.

ஆயுள்காப்பீட்டு திட்டத்தில் வங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுக்கு 12 ரூபாய் ப்ரீமியமாக பெறப்பட்டு ஒருலட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும். அடுத்ததாக, 330 ரூபாய் ப்ரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடுபெறலாம்.

ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்குவரும் இந்த காப்பீடுகளுக்கு, வருகிற 31ம் தேதிவரை வங்கிகளில் விண்ணப் பிக்கலாம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய்வரை ஓய்வூதியம் கிடைக்க வகைசெய்யும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

Leave a Reply