ஸ்ரீ நகரையும் இணைக்கும் விதமாக மலையைகுடைந்து 9.2 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப் பட்டுள்ள நாட்டின் மிக நீளமான  சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் செனானி முதல் நஸ்ரி வரை 9.2 கி.மீ.  தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சுமார் ரூ.2,500 கோடி செலவில்  அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையை பிரதமர் மோடி, நேற்று திறந்து வைத்தார். விழாவில், மாநில கவர்னர் என்.என்.ஓரா, முதல்வர் மெகபூபா முப்தி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாலையை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி, கவர்னர் ஓரா, முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் சிறிது தூரத்துக்கு பயணம்  செய்தனர். பின்னர், சுரங்கப்பாதை கட்டமைப்பு பணியில்ஈடுபட்ட இன்ஜினியர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுடன் சேர்ந்து மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சுரங்கப்பாதையின் மூலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்வதற்கான நேரம் சுமார் 2 மணி நேரம் குறையும். 31 கி.மீ. சுற்றிச்செல்வது இந்த  சுரங்கப்பாதையால் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினமும் ரூ.27 லட்சத்திற்கான எரிபொருள் சேமிக்கப்படும் என பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பொருளாதாரம், சுற்றுலாதுறை வளர்ச்சிக்கு இந்த சுரங்கப்பாதை மிக முக்கியமான காரணமாக அமையும் என்றும்  கூறப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தசுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடும் பனிப் பொழிவு, மழை போன்றவற்றால்  பாதிக்கப்படாதவாறு, ஆண்டு முழுவதும் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் உறுதியாக இருக்கும். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆட்படாமல் இருக்க பாதுகாப்பு  அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. தீத்தடுப்புசாதனங்கள், மின்னணு கண்காணிப்பு முறைகள் 150 மீட்டர் இடைவெளியில் பாதை முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.  இதனால், சுரங்கப்பாதையில் நுழையும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். பிரதமர் வருகையையொட்டி காஷ்மீரில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply