நாடு முழுவதும் புதிதாக 9 புதிய ரசாயன தொழிற் சாலைகள் அமைக்கப்படும் இதன் மூலம் உர உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்  என மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ஞாயிற்றுக் கிழமை சிறுதொழில்துறை ஆணைய கட்டடத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசியளவில் 55 ஆயிரம் கோடியில் 9 புதிய ரசாயன தொழிற்சாலைகள் அடுத்த 5 ஆண்டுகளில் அமைக்கப்படும். இந்த தொழில் சாலைகளை தொடங்குவதன் மூலம் நாட்டிற்கு தேவையான யூரியா, உரங்கள் தயாரிப்பில் தன்னிறைவு அடைய முடியும். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் எங்கும் ரசாயன தொழிற் சாலைகள் அமைக்கப்படவில்லை. நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியில் ரசாயன தொழில் சாலைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடக ரசாயன தொழிற்சாலை தொடங்க தேவையான நிலத்தை வழங்கும்படி முதல்வர் சித்தராமையாவிடம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசாயன தொழில்சாலை தொடங்கப்பட உள்ளது. எரிவாயுசேவை வசதியுள்ள இடங்களில் ரசாயன தொழில்சாலைகள் தொடங்க இடம் ஒதுக்கினால் வசதியாக இருக்கும் என்றார்.

Leave a Reply