90 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஜூலை போராட்டம் குமரி குழுங்கியது நாடுமுழுவதும் ஏழை இந்துமாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகேட்டு குமரிமாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் நேற்று மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜதிடலில் ஜூலை போராட்டம் நடைபெற்றது.

இதில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாஜகவினர் கலந்துகொண்டனர். நாடுமுழுவதும் முஸ்லீம், கிறுஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது. ஆனால், அதைபோன்று ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாததை கண்டித்தும் , வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த நான்கு ஆண்டுகளாக பா.ஜ.க ஜூலை போராட்டத்தை நடத்தி வருகின்றது

இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற ஜூலை போராட்டத்தில் சுமார் 90 ஆயிரம் பேர் கலந்துகொண்ட சம்பவம் பாராளுமன்றதேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பாஜகவினருக்கு உற்சாகத்தை உருவாக்கியுள்ளது .

போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சி.எஸ்.சேகர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் நீலேஷ்ராம், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதிசீனிவாசன், மாநில செயலாளர் முருகானந்தம் , மாநில இளைஞர் அணி தலைவர் பொன்.பாலகணபதி, மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் கவின் கமலக்குமார் தேசிய செயலாளர் விக்டோரியா கவுரி இளைஞர் அணி மாநில செயலாளர் சிம்.சஜு, குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ், சதிச் பாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:

Leave a Reply