ம.பி.,யில்  தசரா திருவிழா நெரிசலில்  சிக்கி 90 பேர் பலி ம.பி.,யில் தசரா திருவிழாவுக்கு கூடியபக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 89 பேர் பலியாயினர். 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ம.பி., மாநிலத்தில் தாட்டியாமாவட்டத்தில் உள்ள ரத்தன் கார் பகுதியில் துர்கைகோயில் உள்ளது. இங்கு தசராவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்றைய விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலானபக்தர்கள் திரண்டனர். இங்கு அம்மனை வழிபட கூட்டம் அலைமோதியது. சிந்துநதிக்கரையில் உள்ள இந்தக்கோயிலுக்கு பாலத்தின் மூலம் பலரும் நடந்துசென்றனர். இந்நிலையி்ல், பாலம் இடிந்துவிழுந்ததாக வதந்தி பரவியது. இதையடுத்து உயிர்தப்புவதற்காக பக்தர்கள் அங்கும், இங்கும் ஓடினர்.

இந்த நெரிசலில் பலர்மிதிபட்டு இறந்தனர். பலர் அருகில் உள்ள சிந்துநதியில் குதித்தனர். சம்பவ இடத்தில் பெரும்பரபரப்பும் , பதட்டமும் நிலவியது. இதுவரை 90 பேர் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 க்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் உயிர்ப் பலி அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Tags:


Leave a Reply