கனடா நாட்டுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், கஜு ராஹோ கோவிலின் 900 வருட பழைமையான சிற்பம் ஒன்றை திருப்பிதந்தார்.

கடந்த 1970ம் ஆண்டு யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் படி, கிளிபெண் என்ற பெயர் கொண்ட அந்த சிற்பத்தை மோடியிடம் ஹார்பர் நேற்று ஒப்படைத்தார். ஹார்பர் உடனான பேச்சு வார்த்தைக்கு பின்னர் கனடா நாட்டு பாராளுமன்ற நூலகத்திற்கு சென்ற மோடியிடம், ஹார்பர் இதனை வழங்கினார்.

இதுகுறித்து வெளியுறவு விவகார அமைச்சக செய்திதொடர்பாளர் சையத் அக்பருதீன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் பாரம்பரியமிக்க கிளிபெண் என்ற சிற்பத்தை கனடா திருப்பி தந்துள்ளது. கஜு ராஹோவில் இருந்த கற் சிற்பத்தினை பிரதமர் மோடி திரும்ப பெற்றுள்ளார் என கூறியுள்ளார்.

அந்த சிற்பத்தி¢ல், நடன மாடும் ஒருவரின் முதுகில் கிளி ஒன்று உடன் இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இந்த விலைமதிப்புமிக்க கலைபொருள் கனடா நாட்டில் ஒருவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லா நிலையில் அது பறிமுதல் செய்யப்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து கனடா நாட்டு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு சிற்பத்தை திருப்பி தருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

One response to “மோடியிடம் 900 வருட பழைமையான சிற்பத்தை திருப்பி தந்த கனடா பிரதமர்”

Leave a Reply