எந்த ஒரு மனிதனுமே 100% வெற்றியாளனாக மட்டுமே தொடர்ந்து இருந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சிறந்த வெற்றியாளனை அருகே சென்று கவனித்துப்பார்த்தால் அவனது செயல்பாடுகளில் பெருமபாலானவை திட்டமிட்டபடி இலக்குகளை நோக்கியும் சில அவற்றிலிருந்து விலகியும் இருக்கும்..இந்த விகிதம் தலைகீழாக மாறுகிறபொழுது அவர்கள் தோல்வியாளர்களாக

சித்தரிக்கப்படுகிறார்கள்.சிலருக்கு வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும்.தனிமனிதனது வெற்றிக்குப் பெரும்பாலும் அவனது முயற்சிகளும் , குறிப்பிட்ட அளவில் அவன் சார்ந்த சமுதாயக்காரணங்களும் பங்கு வகிக்கும்.

இது தனிமனிதன் நிலை. நிற்க.

மோடி அரசு நாடாளுகிற இன்றைய சூழலில் , கிட்டத்தட்ட 12 கோடி வங்கி கணக்குகள் நான்கைந்து மாதத்தில் துவக்கப்பட்டிருக்கின்றன "ஜன்தன்" என்கிற திட்டத்தின்படி. மத்திய, மேல்தட்டு மக்கள் மட்டுமின்றி சாமான்யர்களும் தேசத்தின் நிதி பரிவர்த்தனையில் பங்கெடுத்துக்கொள்வது இதன் மூலம் சாத்தியமாயிருககிறது. பல ஆயிரம் கோடிகளில் பெரிய நிறுவனங்கள் வர்த்தகம் என்றால் சில நூறு ரூபாய்களையாவது ஒரு பரம ஏழை தனது பங்காக செலுத்த முடிகிறது.இராமர் பாலம் கட்ட அணில் உதவி மாதிரி..

வங்கிகளின் நிழல்கூட படாமல் இருந்த மக்களை வங்கிகளுக்கு இழுத்து வந்ததே ஒரு வரலாற்றுச் சாதனைதான் ..
அப்படி வருகிறபொழுது அங்கே நடக்கக்கூடிய பணபரிவர்த்தனைகள், தனது பங்காக சில நூறு ரூபாய்கள் வந்துபோவது , அங்கு நடக்கக்கூடிய செயல்பாடுகள் இவைகளை காணுகிறபொழுது, நூற்றில் ஒரு பத்துபேருக்காவது தாமும் இதுபோல வர்ததகம் செய்ய வேண்டும் ,பணம் சம்பாதிக்க வேண்டும்,சேமிக்க வேணடுமென்கிற ஒரு உந்துதல் , தூண்டுதல் நிகழ்வதற்கும் காரணமாக அமைகிறது என்பதை மறுப்பதற்கில்லை.அதுமட்டுமல்ல, இந்தவங்கிக்கணக்கை துவக்கியவர்களுக்கு ஏதாவது ஓரு அசம்பாவிதம் நேருமென்றால் அவர்களது குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக 100000 ரூபாய் வழங்கப்படுவதென்பது எவ்வளவு பெரிய உதவி சாமான்யர்களுக்கு..?

"தினம்தினம் கூலி வேலைக்குப் போய் சம்பாதித்தால்தான் கஞ்சி காய்ச்சி குடிக்கவே முடியும்" என்ற சூழலில் வாழ்கிற அவர்களுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் என்றால் அந்த குடும்பமே கயிறு அறுபட்ட பட்டம் காற்றில் அல்லாடுவதைப்போல தத்தளிக்காமல் ஏதோ ஒரு அளவிலேனும் சமாளித்துகொள்ள உதவியாக அமைகிறதே..?

அதுமட்டுமா…ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக இரண்டு சிலிண்டர்கள் என அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மீறி நான்கு,ஐந்து என வைத்திருந்தவர்கள் தங்களது தேவை போக மீதமிருந்ததை அதிக விலைக்கு விற்பது தடுக்கப்பட்டதும், இதன்மூலம் அனாவசியமாக தந்துகோண்டிருந்த மானியம் மீதமானதும் தேசத்திற்கு எவ்வளவு பெரிய சேமிப்பு…?

ஆனால் இதை தவறு சொல்பவர்கள் வைக்கும் வாதம்.."ஏழை எளிய மக்களை ஆதார் கார்டுக்கும்,வங்கிக்கணக்கு துவக்குவதற்குமாக அலைய விடுகிறார்கள்…அவர்கள் எல்லாம் வங்கியில் கணக்கு துவங்கி என்ன ஆகப்போகிறது..? "என்பதே..

யோசித்துப்பாருங்கள்..ஏழைகளின் வாழ்வானது எந்தவிதத்திலும் மேம்பட்டுவிடக்கூடாது என்கிற அவர்களின் நரித்தனம் புரியும்.. வருத்தம் என்னவென்றால் இது புரியாமல் சாமான்யர்களும்அவர்களோடு சேர்ந்துகொண்டு அரசை குறைகூறுவதே…

சாமான்யமானவர்களுக்கு உதவும் அருமையான திட்டம்தான்… ஆனால் அதை சரியாக எடுத்துச்சொல்லாமல் "மக்களை அலைய விடும் ஒரு திட்டமாக" கருதுமளவுக்கு எல்லோரையும் விமர்சிக்க வைத்தது ,எதிரணியினருக்கு கிடைத்த வெற்றி.

இவ்வளவு அறுதிப் பெரும்பான்மை பெற்றதற்கு இன்னொரு முக்கியகாரணமாக இருந்தது..முதல்முறை ஓட்டளித்தவர்கள் மற்றும் இளைஞர்களின் ஓட்டு…. "மான் கி பாத் " மூலம் பிரதமர் இளையோர் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து பேசுவது மட்டுமே அவர்களை திருப்திபடுத்தாது..நேரடியாக அவர்களுக்கு உதவக்கூடிய வகையில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துகிற திட்டஙகளோ இல்லை கல்வியை ஊக்கப்படுத்துமாதிரியான திட்டங்களோதான் அவர்கள் மத்தியிலே ஒரு தாககத்தை ஏற்படுததும்… தங்களுககுபெரிதாக இனனும் செய்துவிடவில்லை என்ற வருத்தம் அவர்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது .

ராணுவத்துறையே காயலான்கடை ரேஞ்சில் கடந்த பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததுபோய் நவீனமான டாங்குகள், போர்விமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் வாங்குவதற்கு நிதி ஒதுககீடும், உலக அளவில் வர்த்தக ஒப்பநதங்கள் மேற்கொண்டிருப்பதும் சரியான நடவடிக்கை. அதை நிர்வாகிக்கிற துறை மந்திரியும் கடந்த காலங்களில் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கும் இலக்காகாத, எளிமையான அதேசமயம் உறுதியானவர் என்பது இராணுவத் துறையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு தேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அருமையான அமைவுதான்..

ஒவ்வொரு எம்பியும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை 100% மேம்பாடு அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி ஒரு மாதிரி கிராமமாக உருவாகக வேண்டுமென்கிற திட்டத்தின்படி இனறைய தேதியில் கிட்டத்தட்ட 1000 கிராமங்கள் "மாதிரி"கிராமங்களாக உருவாகிக் கொணடிருக்கின்றன. யோகாக் கலை இன்று உலகநாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, திருவள்ளுவர்,பாரதியை தேசம் அறிய கொண்டாடியது(இதே செயலானது நம்ம ஊர் தலைவர்கள் மூலம் மட்டும் நடந்திருந்தால் இன்றும் தொடர்ந்திருக்கும் அவர்களது பாராட்டு விழாக்களும், வீதிக்கு வீதி "தமிழே, அமுதே நன்றி" போஸ்டர்களும்…) பெண் சிசுவதை தடுப்பு, டில்லியில் அரசு ஊழியர்களை முழு நேரம் வேலை செய்ய வைத்தது…என தொடரும் பட்டியல்.

"கூரை ஏறி கோழியைப்பிடி..வானம் ஏறி வைகுண்டம் போகலா" மென ஒரு சொலவடை சொல்லுவார்கள். "உள்ளூரில் ஆயிரம் வேலைகள் அவசரமாக கவனிக்கப்பட வேண்டியதாயிருக்க , இவருக்கு எதற்கு உலகத்தை சுற்றுகிற வேலை "..என்ற கமெண்ட்ஸ் தற்போது பரவலாக எல்லாரிடத்திலும். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய குடும்பத்திற்குள்ளே இருக்கிற பிரச்சனைகளை ,குழப்பங்களை சரி செய்யமுயல்கிற அதே நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரரோடும்,எதிர்த்த வீட்டுக்காரரிடமும் இன்னும் சொல்லப்போனால், அந்த ஊரில் உள்ள மற்றவர்களிடமும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தான் ..வாழ்க்கையை சுமூகமாக ,இலகுவாக கொண்டுசெலுத்தமுடியும்…தன்னுடைய பிரச்சனைகளை மட்டுமே முன்வைத்து ஊரார் சம்பந்த முள்ளவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிவைத்தால் ..தன் வீட்டில் உள்ள பிரச்சனைகளை கூட அவனால் தீர்த்துக கொள்ள இயலாது..ஏனென்றால் குடும்பத்தில் உள்ளே உள்ள அந்த பிரச்சனைகள் , அதைசசார்ந்த சமுதாயத்தோடும் நேரடி தொடர்புகொண்டவை.

அதுபோலத்தான் ஒரு தேசத்தின் செயல்பாடும் ,முன்னேற்றமும்.. எல்லாத் துறைகளிலும் உலக அரங்கில் தாழ்ந்த இடத்தில் இருநத இந்திய தேசத்தின் மதிப்பை திரும்பவும் உயர்த்த வேண்டிய கட்டாயம் அவருக்கு..அதை சரிசெயய வேண்டுமென்றால் இராஜ்ஜிய தொடர்புகளாகட்டும்,தலைவர்களை சந்திப்பதாகட்டும், உலகம் தழுவிய பிரச்சனைகளில் தனது நிலையை தெரிவிப்பதாகட்டும்..காலதாமதம் செய்யாமல் விரைந்து செயலாற்றுவது வெகு அவசியம்.அதைத்தான் செய்து கொணடிருககிறார் நமது பிரதமர்.

தொழிற்துறை வளர்ச்சியென்பது உள்நாடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல..வெளிநாட்டு முதலீடுகள் மற்றும நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம் என்பது ஒருபுறம்..இன்னொருபுறம் நம்முடைய கம்பெனிகள் தயாரிப்பதை வெளிநாட்டில் மார்க்கெட் செய்யவும் ஒரு ஆரோக்கியமான நட்பான அரசியல் சூழலை உள்நாட்டில் உருவாககித்தருவதும் ஒரு அரசின் தலையாய கடமை..

கடந்த 60 ஆண்டுகளில் தேச நலனுக்காக எந்த திட்டஙகளும் செயல்படுத்தப்பட வில்லை என்பது அல்ல குற்றச்சாட்டு … போதுமான அளவில், ஆரோககியமான முறையில் செயல்படுத்தபட்டதா..என்றால் இல்லையென்பதே விஷயம்…அதை உறுதிசெய்கிறது அவர்களின் தொடர் தோல்வி..

"தேசபக்தரான நேரு பரம்பரை நாங்கள்" என்பது உட்பட , அவர்களின் எநதவிதமான விளக்கங்களும் மக்களை திருப்தியடையச்செய்யவே இல்லை இதுவரை..

கடந்த காலங்களில் வலிமையான மாற்று உருவானபொழு தெல்லாம் எதிர் அணியினர் ஒற்றுமையாக அதை எடுத்துச் செல்லாததனாலயே இதுவரை முன்னவர்கள் கடைவிரிக்க முடிந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

"மோடி அரசு வந்தபிறகு மத மாற்றங்கள் தாராளமாக நடக்கின்றன; அது குறித்து அவர் எந்த விதமான கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை" என்று ஒரு குற்றச்சாட்டு. முதலில் மதம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் உரிமை. மதமாற்றத்தை செய்யும் அமைப்புகள் அவர்களை அணுகி பேசி அவரது சம்மதத்தின் பேரில் அது நடக்குமானால் ..அதற்கு மோடி என்ன செய்யமுடியும்..? "மதமாற்றம்தான் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையாக இருக்கிறது. எனவே மதமாற்ற தடைச் சட்டத்தை அமுல் படுத்துவோம்" என்று மோடி அறைகூவல் விடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்..? ஏன் எதிரணியினர் அதற்கு ஆதரவளிக்க வில்லை? ஏன் மெளனமாகவே தட்டிக் கழிக்கிறார்கள்.? எல்லோருக்குமே நல்லதுதானே? ஆக மதமாற்றத்திற்கு அவரை காரணியாக்குவது இவர்கள் தங்களை"சிறுபான்மையினரின் காவலர்களாக" தங்களை காட்டிக்கொள்ளும் பொய் முயற்சியல்லாது வேறென்ன… ?

"ஒவ்வொரு தனிமனிதனும் ஒழுங்காக நடந்துகொள்கிற பொழுது ஒரு குடும்பம் ஒழுங்காகிறது. ஒவ்வொரு குடும்பமும் ஒழங்காகிற பொழுது அந்த தேசமே ஒழுங்காக,சீராக நடக்க ஆரம்பிக்கிறது". இந்த தனிமனித ஒழுங்கைத்தான் எல்லா மதங்களுமே போதிக்கின்றன. வலியுறுத்துகின்றன. மோடியின் தனி மனித ஒழுங்கினை உலகமே அறியும். அவரது தனிப்பட்ட ஒழுங்கை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் , ஜீரணிக்க முடியாதவர்கள்தான் இன்று அவர் மீது களங்கத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சுயத்தை ஆராய்ந்தால்…நாற்றமெடுக்கும். வாரிசு அரசியல், வகைவகையாய் பங்களாக்கள்,திரும்பிய பக்கமெல்லாம் திருடிச் சேர்த்த சொத்துக்கள், கண்ணியக் குறைவான செயல்பாடுகள்…அனுமாரது வாலாய் நீளும் பட்டியலிட்டால்.. . ஆனால் அவரகள் குறைசொல்வது மோடியை..? இதிலிருநதே தெரிந்து கொள்ள வேணடாமா அவர்களது அருவருக்கத்தக்க அரசியலை..??

"வாராது வந்த மாமணி" போல புதிய தலைமை வந்திருப்பது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறி.. பல ஆண்டுகளுக்கு முன் நமது பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத்தலைவர் அபதுல்கலாம் அவர்கள் "2020-இல் இந்தியா வல்லரசு நாடாக மாறும்" என்று சொன்னபொழுது எப்படி இது சாத்தியம் என்றே பெரும்பாலானோருக்கு சந்தேகம்இருநதது. ஆனால் இன்றைய சூழலில் அது சாததியமாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆக மேன்மக்களின் வேணடுகோள் வீண்போவதில்லை என்பது திரும்பவுமே நிரூபணம் ஆவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.

"சமுதாயம்,தேசம் மற்றும் ஆடை இந்த மூன்று விஷயங்களும் எனக்கு பிடித்தமானவை" என்று நமதுபிரதமர் முன்னரே சொல்லியிருக்கிறார். இன்றோ அமெரிக்க அதிபர் வருகை புரிந்த சமயத்தில் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து அதிகமாக விமர்சிககப்படுகிறது. ஒரு சாதாரண சினிமா கதாநாயகனோ , நாயகியோ பல இலட்சம் , பல கோடி மதிப்புள்ள ஆடைகளை அணிந்துவந்தால் அதை கைதட்டி வரவேற்கிற நாம் ஒரு தேசத்தின் தலைவர் அவருககு பிடித்தமான ஒரு ஆடையை அணிவதை தவறென சொல்கிறோம்…
அவருக்கென இருக்கும் ஒரே ஒரு சுயமான விஷயத்தையும் கையிலெடுத்துக்கொண்டு அளவுக்கு மீறியே விமர்சிக்கிறோம். "அவர் அணிந்து கொண்ட ஆடை இவ்வளவு விலை உயர்வானதாக இருக்கிறதே?" என்று விமர்சனத்தை முன்வைக்கிறவர்கள் அதே நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பங்களாக்களையும் ,சொத்துக்களையும் வாஙகி குவித்திருப்பதையும் , குடும்ப விஷயத்தில் ஒழுக்கக்கேடாக நடப்பதையும் , செல்வச்செழிப்பிலேயே மிதப்பதையும் மறந்தது ஏன்.? "பிறரை நோக்கி ஒற்றை விரலை நீட்டுகிறபொழுது தன்னை நோக்கி மூன்று விரல்கள் சுட்டப்படுகிறது " என்பதை கொஞசமேனும் யோசிக்கவேண்டாமா..?
அதுமட்டுமா .. அந்த ஆடையின் விலை 10 இலட்சம் ரூபாய் என்றவர்கள், இப்போது அந்த ஆடையை ஏலம்விட்டதின் மூலம் கிடைத்த தொகையை கங்கையைசுத்தப்படுத்தும் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கியபொழுது அதையும் சந்தேக கண்ணோட்டத்தோடு "அரசே நாடகமாடுகிறது" என குற்றம் சாட்டுவது நாகரீகம் தவறிய அரசியலின் உச்சகட்ட அலங்கோலம்.

ஆனால் இது எதையுமே பொருட்படுததாது நமது பிரதமர் பணியாற்றிக்கொண்டிருப்பது அவரது முதிர்ச்சியையும், அரசியலில் தெளிவையும் காட்டுகிறது..
இப்படி பலப்பல ஆரோக்கியமான வளர்ச்சி பணிகள் பலதுறைகளிலும் நடநதவண்ணமே இருந்தாலும் அரசாங்கத்தின் முக்கிய செயல்… அதன் செயல் திட்டங்களை பற்றியும் அதன் நல்ல விளைவுகள் பற்றியும் மக்களிடம் சென்றடையுமாறு தெளிவாக எடுத்துரைப்பது. இநத விஷயத்தில் நன்றாகவே கவனம் செலுத்துவது அவசியம். எல்லா மீடியாக்கள் மூலமாகவும் திட்டஙகளின் பலனை மக்களை சென்றடையச்செய்யவேண்டும்.அதுமட்டுமல்ல..இந்த திட்டங்கள் எல்லாம் நன்முறையில் செயல்பட்டு நாட்டுமக்களின் பயன்பாட்டிற்கு அதுவும் குறிப்பாக கீழ்த்தட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும்..

வருங்கால பாரதம் வலிமையோடு உருவாவது ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும்..இன்றைய சூழலில் சாமான்யர்களுக்கு உதவிடும் வகையில் உடனடியாக சில விஷயங்களை செய்வது மிக அவசியம்..சொல்லப்போனால் இதை "எம்ஜிஆர் பார்முலா" என்றுகூடச் சொல்லலாம்.. சாமான்யனின் உடனடி தேவை அவனது வயிற்றுப்பாடடினை கவனிப்பது..கும்பி காய்ந்துவிடாமல் இருககச்செய்வது… பசி மயக்கத்தில் இருப்பவனுக்கு நாளைக்கு கிடைக்கப்போகிற பாயாசத்தில் முந்திரியும் , நெய்யும் மிதக்கும் என்றால் என்ன பிரயோஜனம்..?

இன்றைய கலாக்காய்க்கு வழிவதே அவனது தேவை அவனது எதிர்பார்ப்பு..இது மட்டுமல்ல , உணவைத்தவிர பிற அடிப்படை தேவைகளான உறைவிடம் , உடை என்கிற மற்ற இரு விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கும் அடிப்படையில் தேவையான தீர்வுகளை ஓரளவேனும் வழங்கிவிட்டு தனது பணியை தொடர்வாரென்றால்..இன்னும் பத்து ஆண்டுகள் மட்டுமல்ல, ஆயுள் முழுதுமே கூட அவரது அரசை அகற்ற முடியாது..

நிலத்தை கையகப்படுத்துவதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட அரசின் அவசர சட்டமானது , விவசாயத்துறையின் நலனுக்கு எதிரானது என்கிற கருத்தானது நாடு முழுதும் பரவி பல போராட்டங்களுக்கு இடம்தரும் சூழலில் உடனடியாக அது குறித்து விரிவாக தெளிவுபடுத்துவதும், அபபடி உண்மையாகவே தவறான விதிமுறைகள் இருககக்கூடிய பட்சத்தில் அதை திருத்திக்கொள்ளமுயல்வதும் மக்களிடையே நல்ல பெயரையே பெற்றுத்தரும். முன்பே சொன்னதுபோல எல்லாவற்றையுமே சரியாக செய்ய ஒரு தனிமனிதனுக்கே முடியாதபொழுது 120 கோடிஜனத்தொகை கொண்ட தேசத்தின் நிர்வகத்திற்கும் அது சாத்தியமில்லை.. அதே சமயம் தவறென வருகிறபொழுது திருத்திக்கொள்வது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வளர்த்துமேயன்றி குறைக்காது..

அதுபோலவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு அனுமதிப்பதும்..இந்த இரண்டுமே இந்த தேசத்தின் முதுகெலும்பையே உடைக்கக்கூடிய ஒன்று எனபதை யாருமே மறுக்கமுடியாது..

நல்லதொரு வலிமையான அரசே பாரதத்தின் இன்றைய தேவை. சின்னசின்ன விஷயங்களுககாக அதை காவு கொடுத்துவிடாமல் , நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்பதும், நன்மையளிக்காத செயல்பாடுகளை ஆதரத்தோடு எதிர்ப்பதும்தான் சரியாக இருக்குமே தவிர, செய்கிற செயல்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக கண்ணைமூடிக்கொண்டு எதிர்ப்பதும் தேசநலனுக்கு நல்லதல்ல..

கடந்த 60 ஆண்டுகால ஆட்சிக்காலத்தின் தவறான விளைவுகள் நாட்டின் முன்னேற்றத்தையும்,இறையாண்மையையும் படுபாதாளத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறது. அதை இழுத்துப்பிடித்து நிறுத்தி" ஜீரோ லெவல்" எனப்படுகின்ற நிலைக்கு கொணடுவருவதற்குத்தான் கடநதபத்துமாத கால பணிகள் உதவியிருக்கிறது. தவறு செய்யும் தனிமனித செயல்பாட்டை சரிசெய்யவே சில மாதங்கள் பிடிக்கிறபொழுது , ஒரு அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகளை கட்டுப்படுத்தி மட்டுப்படுத்த இந்த காலகட்டம் என்பது மிகமிக குறைவே..

இந்த 60 ஆண்டுகளாக, தேசத்தின் கடைக்கோடியில் இருக்கும் அதிகம் படிப்பறிவில்லாத ஒரு கிராமத்துவாசி தனது கிராமத்தின் நல்ல அல்லது சரியில்லாத செயல்பாட்டிற்கு காரணமாக அவரது மணியக்காரரையோ, தாசில்தாரையோ, கலெக்டரையோ தொகுதி எம்எல்ஏவையோ, எம்பியையோ அதிகபட்சமாக அந்த மாநில அரசையோதான் பராட்டவோ அல்லது குறைசொல்லவோ செய்துகொண்டிருந்தார். அதற்குமேல் மத்திய அரசை பற்றி விமர்சிப்பதோ பாராட்டுவதோ குறைவு. அந்த வரையறைகளை தாண்டி " இந்த நல்ல திட்டத்திற்கு காரணம் மத்திய சர்க்கார்" ," இந்த மோசமான விஷயத்தைச் செய்தது மோடி சர்க்கார் " என்று மத்திய அரசை விமர்சிககும் அளவிற்கு வந்திருப்பதே நல்லதொரு விழிப்புணர்ச்சியை காட்டுகிறது .அதுவும் மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்களையும் தாண்டி, நடுவண் அரசை மக்கள் விமர்சிப்பது என்பது பேரதிசயமும் கூட.

ஆக, "மக்களின் அன்றாட வாழ்க்கையில் மத்திய அரசின் பங்களிப்பும் இருக்கிறது" என்பதே ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்க உதவும். மாநிலம் தாண்டி தேசிய பிரச்சனைகளையும் ஓட்டளிக்கும் மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறபொழுது , வருங்காலத்தில் தேசிய கட்சிகள் வளர்வதற்கும் இது உறுதுணையாக அமையும்.

"இந்திய தேசமே எனது மதம்" என்கிற ஒரு இலட்சியத்தோடு பணியாற்றும் மோடி அரசு பத்து மாதங்களில் பதித்த மணியான முத்திரை இதுதான்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.