பார்லிமெண்டில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ரெங்கராஜனின் கேள்விக்கு பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிமீ பரப்பளவு மீத்தேன் எரிவாயு தோண்டியெடுப்பதற்கான "கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்" கம்பெனிக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது..எனவும்…

"மேலும் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்காக ONGC நிறுவனத்திற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை" எனவும்..

என இரண்டு செய்திகளை அறிவித்திருக்கிறார்..

இதற்கு மீத்தேன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் "கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்" கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு, திட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்த முன்னாள் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் "திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தெரியாமல் 2011-ல் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். இதற்கு ஒப்புதல் கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசு தான்" என 20-ந் தேதி திருவாரூரில் பேசியுள்ளார்.

இதிலுள்ள உண்மைகள் என்னென்ன?

"காங்கிரஸ் ஆட்சிதான் ஒப்புதல் கொடுத்தது" என்றால், 2013 வரை அதனுடன் கூட்டணியில் நீடித்த திமுக, மீத்தேன் திட்ட ஒப்புதலை ரத்து செய்ய ஏன் கோரவில்லை?
தமிழ்நாட்டில் புதிதாக 2011-ல் பொறுப்பேற்ற அதிமுக அரசு, திமுக தொடங்கிய புதிய தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு திட்டங்களை "கேன்சல்" செய்தது போல "மீத்தேன் திட்டத்தை" ஏன் கேன்சல் செய்யவில்லை.
கங்கிரஸ் கொண்டுவந்த மீத்தேன் திட்டத்திற்கு பாஜக அரசு மீது கண்டனம் தெரிவிப்பது எந்த வகையில் அரசியல் நியாயம்?

மீத்தேன் திட்டத்தை பாஜக அரசு பூரணமாக ரத்து செய்யவில்லை! "கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்பரேஷன்" மத்திய அரசின் டெண்டர் கண்டிஷன்களை பூர்த்தி செய்யவில்லை. எனவே "காண்ட்ராக்ட்" தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது" என்று தமிழகத்தின் எதிர் கட்சிகளும், "வாய்ச்சவடால்" வைகோவும், "மீத்தேன் திட்ட நாயகி" கனிமொழியும் திருவாய் மலர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ONGC க்கு எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்று பெட்ரோலிய மந்திரி எழுத்து மூலமாக அறிவித்திருப்பதும், பழைய திட்டம் ஒப்பந்தம் ரத்தும் என்பதும் புதிய திட்டம் இல்லை என்பதையும் தெளிவாக்கிவிட்ட பிறகு—" தமிழக கட்சிகளின் மற்றுமொரு அரசியல் வியாபாரமான "மீத்தேன் வியாபாரம்" முடிவுக்கு பாஜக கொண்டுவந்துவிட்டது….மீத்தேன் கடை மூடப்பட்டுவிட்டது"

இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் காங்கிரஸின் "விவசாயிகள் விரோத திட்டத்திற்கு" மூடுவிழா நடத்திய பாஜகவை பாராட்ட மனம் இல்லாதது மட்டுமல்ல… மீத்தேன் திட்டத்தை முழுதாக ரத்து செய்யவில்லை என்று கூக்குரல் இடுகிறார்கள்!

மீத்தேன் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார் – ஜெயலலிதா தொடர்ந்தார்… காங்கிரஸ் கொண்டு வந்தது – பாஜக ரத்து செய்தது! இது சரித்திரம் சொல்லும் உண்மை..

ஆனால் கொண்டுவந்தவர்களையும், தொடங்கியவர்களையும், கண்டிக்காத, எதிர்த்து ஆர்ப்பட்டம் செய்யாத– கம்யூனிஸ்ட், வைகோ மற்றும் தமிழக கட்சிகள், பாஜக மீது புழுதி வீசக்காத்திருந்தது. ஆனால் மீத்தேன் திட்டத்தை இவ்வளவு விரைவில் பாஜக ரத்தும் செய்யும் என கனவிலும் நினைக்காத தமிழக கட்சிகளின் "கனவில்" மண் விழுந்தது.

அவர்கள் பாஜக மீது வீச வைத்திருந்த புழுதியில் அவர்களே இன்று "மறைந்து போனார்கள்"

இவர்களின் "மீத்தேன்" அரசியல் வியாபாரம் வாங்க ஆளின்றி கடை மூட– பாஜக காரணமாகிவிட்டது.
வியாபாரத்தில் நஷ்ட்டமடைந்தவர்கள் பாஜகவை எப்படி பாராட்டுவார்கள்?

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.