பாராளுமன்றத்தில் நிதிமசோதா நிறைவேறியது. பிரதமரின் சமூகபாதுகாப்பு திட்டங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரிகணக்கு தாக்கல்செய்ய எளியபடிவம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நிதிமசோதா மீதான விவாதத்துக்கு நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர், உலகளவில் பொருளாதார நிலை மந்தமாக இருந்தபோதும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்தியப்பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வருகிறது, ''பிரதமர் தனது பயணத்தின் மூலம் மேக்கிங் இந்தியாவின் குரலை (இந்தியாவில் தயாரிப்போம்) ஒலிக்கச் செய்யும், தேசிய கடமையை நிறைவேற்றி வந்துள்ளார்'' தேசிய கடமையை நிறைவேற்றுவதற்கு பயணம் மேற்கொள் வதற்கும், உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு .

நிலம் கையகப்படுத்தும் சட்டமசோதா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற எதிர்க்கட்சியினரின் பிரசாரத்ம் போய். , ''இது விவசாயிகளுக்கு ஆதரவானது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என தவறாகமுத்திரை குத்தப்பட்டு விட்டது''

வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு 14 பக்க படிவம் நிறுத்தப்பட்டு விட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை நிரப்புவதற்கு ஆலோசகர்களை நாடிச்செல்லாமல், கணக்கு தாக்கல்செய்கிறவரே நிரப்புகிற வகையில், எளிமையான படிவம் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறோம் , விரைவில் அதைக் கொண்டு வருவோம் .

பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு சேவைவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பட்டு, இரும்புத் தாது, ரப்பர் உள்ளிட்டவற்றின் மீதான மறைமுகவரி விதிப்பு வீதங்களிலும் மாற்றங்களை வெளியிட்டார். தரம் குறைந்த இரும்புதாது ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது கோவாவில் இருந்து இரும்புத் தாது ஏற்றமதியை ஊக்கப்படுத்தும்.

பொதுகடன் மேலாண்மை முகமை அமைக்கும் திட்டம் கைவிடப்படும். இதேபோன்று அரசு பத்திரங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கியிடமிருந்து செபி என்னும் இந்திய பங்குகள் பரிமாற்ற வாரியத்துக்கு மாற்றப்படும் முடிவும் கைவிடப்பட்டுள்ளது .

இதனை தொடர்ந்து நிதி மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேறியது. இது பட்ஜெட்டுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி மசோதாவின் மீது மத்திய அரசின் சார்பில் 41 திருத்தங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் தோல்வி கண்டன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.