தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்றும் அவர் இந்தவழக்கில் இருந்து தப்பவே முடியாது என்றும் பாஜக.,வின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா ஒரு போதும் தப்பமுடியாது. வழக்கு அந்தளவு வலுவாக உள்ளது.

மாதம் ஒருரூபாய் சம்பளம் வாங்கியவர், இத்தனை சொத்துக்களை எப்படி வாங்கமுடியும்?. எனவே இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா தப்ப வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்படும் . நில கையகப்படுத்தும் சட்டம், சாலை பாதுகாப்புசட்டம், புதிய இன்சூரன்ஸ் மசோதா போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தாலும், தனிமெஜாரிட்டி பெற்றிருப்பதால் அந்தசட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணா நிதியின் குடும்பம், மாறன், சிதம்பரம் என எல்லோரும் சிறைக்குசெல்வது உறுதி. வழக்கு விசாரணை சற்று தாமதமாகலாமே தவிர வழக்கில் இருந்து யாரும் தப்பமுடியாது. அ.தி.மு.க., தி.மு.க. என இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்று தான். நாட்டுக்கு துரோகம்செய்வது, ஊழல் செய்வதுதான் அவர்களின் கொள்கை. அருண்ஷோரி இப்போது பாரதிய ஜனதாவில் இல்லை. யாரைப் பற்றியும் கருத்துக் கூற அவருக்கு உரிமை இருக்கிறது. அது அவரதுகருத்து.

யாருக்கு தாலிபோட இஷ்டம் இல்லையோ அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டாம். அதற்காக விழா நடத்துவது என்பது தேசதுரோக வேலை. இதுமாதிரி செய்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.