ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ் மீது அக்கட்சியின் பெண்உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுமுன்பாக பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால், குமார் விஷ்வாஸை பாதுகாக்கிறார் என குற்றம் சாட்டிய அவர்கள், நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் வீடுமுன்பு இருந்த தடைகளை உடைக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.

குற்றச் சாட்டுகளுக்கு குமார் விஷ்வாஸை பதிலளிக்க செய்யவேண்டும் என்று முறையிட்டதை அடுத்து டெல்லி பெண்கள் ஆணையம் குமார்விஷ்வாஸ் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று சம்மன் அனுப்பியது.

அவர்கள் இருவரும் ஆணையத்தின் முன் ஆஜராகவேண்டும் என கேட்டு கொண்டது. ஆணையத்தின் முன் ஆஜராகபோவதில்லை என கூறியுள்ள குமார் விஷ்வாஸ் தனக்கு நோட்டிஸ் எதுவும் கிடைக்க வில்லை என கூறியுள்ளார்.

குமார் விஷ்வாசுடன் தொடர்புவைத்தது குறித்த தகவல் பரவியதை அடுத்து தன்னிடம் இருந்து தனதுகணவர் விலகி சென்றுவிட்டார் என அந்த பெண் கூறியது குறித்து கேட்டதற்கு பதிலளித்த குமார் விஷ்வாஸ், தனது மனைவியின் நடத்தை குறித்து சான்றிதழ் அளிக்க மற்றொரு நபரைதேடும் இவர் என்ன வகையான கணவர்? என கூறியுள்ளார்.

அந்தபெண் அளித்த புகாரின் அடிப்படையில், எப்.ஐ.ஆர். முன்பே பதிவு செய்யப்பட்டு விட்டது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் டெல்லிபோலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply