பாபா ராம் தேவின் நிறுவனம் தயாரித்துள்ள புத்ர ஜீவக் பீஜ் ஆயுர் வேத மருந்தை விற்பனைசெய்ய மத்தியப் பிரதேசம் மாநில அரசு இன்று திடீர்தடை விதித்துள்ளது.

யோகா குரு பாபா ராம் தேவ் நடத்தி வருகிற திவ்யா பார்மசி மருந்து நிறுவனம், ஆண் குழந்தைகளை மட்டுமே பெண்கள் பெற்றெடுக்க உதவும் 'புத்ரஜீவக்பீஜ்' ஆயுர்வேத மருந்தினை தயாரித்து விற்பனைசெய்து வருவதாக டெல்லி மேல்-சபையில் பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்தசர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம் தேவ், ஆண், பெண் என்ற பாலினத்தை தீர்மானிப்பதில் 'புத்ரஜீவக் பீஜ்' எதுவும் செய்வ தில்லை. பிரதமர் மோடியின் பெயரை களங்கப் படுத்தும் நோக்கத்துடன், சிலர் எனக்கு அவதூறு ஏற்படுத்த முயற்சிக் கிறார்கள். எங்களது மருந்து, குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாத தம்பதியர் குழந்தைப்பேறு அடைவதற்குத் தான் உதவுகிறது. ஆண்குழந்தை என தீர்மானிப்பதில் எந்த பங்கும் ஆற்றுவதில்லை. எனவே, இந்தமருந்தின் பெயரை மாற்ற முடியாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தமருந்தை விற்பனைசெய்ய மத்தியப்பிரதேச மாநில அரசு தடைவிதித்துள்ளது. புத்ரஜீவக் பீஜ் என்ற பெயரை மாற்றும் வரை இதை கடைகளுக்கு சப்ளை செய்யவேண்டாம் என வினியோகஸ்தர்களை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுதுறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply