இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் 38 ஆயிரம் கோவில் களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் கோவில் வருமானம் வரும்கோவிலை மட்டுமே இந்து அறநிலையத் துறை கவனிக்கிறது. வருமானம் வரும் கோவில்களிலும் பக்தர்களை கசக்கிப்பிழிந்து கல்லாகட்டும் கேவலம் அரங்கேறுகிறது.

அதிலும் கோவில்களில் தரிசன கட்டணம் என இறைவனை தரிசிக்கவரும் பக்தர்களிடம் பாகுபாடு படுத்துவது கேவலத்திலும் கேவலமானது. ஆலய தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தொடக்க காலம் முதலே வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வருமானம் அதிகமுள்ள 234 கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்துசெய்ய தமிழக அரசிற்கு இந்து அறநிலையத் துறை பரிந்துரைத்திருப்பது பாராட்டத்தக்கது. தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், அனைத்து ஆலயங்களிலும் இறைவன்முன் பக்தர்கள் அனைவரும் சமமாக நடத்திடவும், அனைவரும் கௌரவத்துடன் இறைவனை தரிசிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கோவில் தரிசன கட்டணத்தை ரத்துசெய்யும் தமிழக அரசிற்கு இந்து முன்னணி பாராட்டுத் தெரிவித்துக் கொள்வதோடு, முழுமையாக அனைத்து தரிசன கட்டணங்களையும் அனைத்து கோவில்களிலும் ரத்துசெய்யவும் வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.