தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்னையாக இருந்துவருகிறது.இந்த பிரச்னை தீர்க்கப்படவேண்டும்; மீனவர்களின் நலன் காக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான், தமிழக பாஜக., அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளை அறிந்தது. பின், தீர்வுகாண்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.இந்த பிரச்னைகளை தீர்ப்பதில், பிரதமர் உறுதியாக ஆர்வமாக இருக்கிறார்.

அதனால் தான், தமிழக மீனவர்களை டில்லிக்கு அழைத்து சென்று, அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசவைத்தோம். அவரும் நல்ல எண்ணத்தோடு மீனவ சங்கபிரதிநிதிகளிடம் பேசினார்.

அப்போது, 'இன்னொரு நாட்டின் எல்லைக்குள் சென்று, மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த முடியாது. பாரம்பரிய முறைப்படி மீன்பிடிக்க சென்றால், அதற்கான அனுமதியை பெற்று தரதயார்.

இல்லாத பட்சத்தில், மாற்றுவழியாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு, தேவையான பயிற்சிகளை வழங்குவதோடு, தேவையான நிதியை ஒதுக்கவும் தயாராக இருக்கிறேன்' என, தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் ஆக்கப் பூர்வமான பேச்சை சிலர், அரசியலாக்குவது சரியா? கச்சத்தீவு பிரச்னை, நெடுநாளைய பிரச்னை. அதை தாரைவார்த்தபோது எதிர்க்காமல் உடன் இருந்தவர்கள், இப்போது, உடனடியாக அதைமீட்க சொல்வது வேடிக்கையாக உள்ளது.வாழ்க்கைக்காக, வலைவீசுபவர்கள் மீனவர்கள். அவர்கள், அரசியல் கட்சிகளின் மாயவலையில் சிக்கி விடக் கூடாது.மீனவர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துகிறவர்களை, அவர்கள் தான், இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.இவ்வாறு, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.