சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தாண்டே வாடா மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று செல்கிறார்.

சமூகபொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் அப்பகுதியில் எந்நிலையில் இருக்கிறது என்பதை நேரில்காண பிரதமர் தாண்டேவாடா செல்கிறார்.

இரண்டு மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி திட்டங்களுக்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ரவ்கட் – ஜக்தால் பூர் ரயில்வே பாதையின் 2-ம் கட்டப்பணிகள் மோடியின் வருகையின் போது தொடங்கி வைக்கப்படுகிறது.

நலிவடைந்த பிரிவை சேர்ந்த சிறுவர்களுக்கான கல்வி நகரம் ஒன்று உருவக்கப் பட்டுள்ளது. இங்கு பிரதமர் மோடி வருகை தந்து அங்கு மாணவர்களுடன் உரையாடுகிறார்.

இந்தக்கல்வி நகரம் சுமார் 100 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ரூ.120 கோடி செலவில் உருவாக்கபட்டுள்ளது. சுமார் 5,000 நலிவடைந்த குழந்தைகளுக்கு இங்கு தரமான கல்விவழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் தாண்டேவாடா இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள இயங்கிவரும் வாழ்வாதாரக் கல்லூரிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

நக்ஸல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் தாண்டே வாட மாவட்டத்தில் இரும்புதாது வளம் அதிகம். இங்கு உள்ள தில்மிலி கிராமத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் டன்கள் ஸ்டீல் உற்பத்தித்திறன் கொண்ட மிகப் பெரிய ஸ்டீல் தொழிற்சாலையை உருவாக்க மோடியின் வருகையின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் ரூ.18,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யப் படுகிறது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரவ்கட்-ஜக்தால் பூர் இடையே 140 கிமீ தூரத்துக்கான ரயில் பாதை ரூ.24,000 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது.

இதற்கிடையே பிரதமர் வருகையையொட்டி இரண்டடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாநில ஆயுதப் படைகள் தவிர துணை ராணுவப் படையினர் ஆகியோரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.