மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி தலைமை யிலான திரிண மூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக.,வுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் நல்ல அரசியல்மசாலா என்று பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக தேசிய செயலாளரும் மேற்குவங்க பொறுப்பாளருமான சித்தார்த் நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் நெருக்கத்துடன் இருப்பதாக சிலஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் குறைகூறி வருகின்றனர். பின்தங்கிய கோடிக் கணக் கானவர்களின் நலனுக்காக மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணக்கமாக செயல்படுகிறது. இந்த கண்ணோட்டத்தை மறந்து இருகட்சிகளும் நெருக்கத்துடன் இருப்பதாக கூறுவது அரசியல்மசாலா.

அரசியல் ரீதியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக தொடர்ந்துபோராடும். ஆனால், அரசியலுக்காக மக்கள் நலனை பலிகடா ஆக்கமாட்டோம்.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 12 கோடி பேருக்கு வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள் ளன. இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் பிறந்து திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில்வளர்ந்த சீட்டு நிறுவனங்களை மக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை மாறி உள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் மோடி கொல்கத்தாவில் தொடங்கிவைக்கிறார். அதன் பிறகு மாநிலத்தில் உருக்கு ஆலை ஒன்றை திறந்துவைக்க உள்ளார். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.