'ஏழைகளை வங்கி களுடன் இணைத்தவர் பிரதமர் மோடி,  ஏழைகளை பார்த்து இனியாரும் ஏளனம்செய்ய மாட்டார்கள் '' என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய அரசின் 'பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா', 'பிரதமர் சுரக்ஷா பீமாயோஜனா' காப்பீடு மற்றும் 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டங்கள் 115 இடங்களில் அறிமுகப் படுத்தப்பட்டன.

மதுரையில் இத்திட்டங்களை துவக்கிவைத்து பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஏழைகளுக்கு சுயகவுரவம் மிகப் பெரிய பலம் என்பதை உணர வைக்கும் வகையில் பிரதமர் மோடி, இத்திட்டங்களை அறிமுகப்படுத்தி யுள்ளார். வங்கிகளை அடித்தட்டு மக்களோடு தொடர்புபடுத்திய பெருமை அவரையே சேரும். ஆண்டுக்கு ரூ.330 செலுத்தினால், எதிர்பாராத இறப்பின்போது அக்குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால், விபத்தின் போது ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்.

ஏழைகளை பார்த்து இனியாரும் ஏளனம்செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இரண்டு 'பாலிசி'களையும் எடுத்தவர்கள் ரூ.4 லட்சத்திற்கு சொந்தக்காரர்கள். தினமும் ஒருரூபாய் வீதம் காப்பீடு செலுத்தினால் போதும். பிரதமர், ஒருரூபாய்க்கு மேல் சிந்தித்து பார்க்கவில்லை. மதுரையை சேர்ந்த வங்கிகள் இது வரை ஒரு லட்சத்து 62ஆயிரம் 'பாலிசி'கள் பெற்றுள்ளன என்றார்.

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுமேலாளர்கள் தீபக் குமார், ராதா கிருஷ்ணன், சம்பத் குமார், திருஞான சம்பந்தன், 'நபார்டு' துணைப் பொது மேலாளர் மல்லிக், யுனைடெட் இன்சூரன்ஸ் பொதுமேலாளர் அலமேலு பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.