சர்வதேசளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த தொண்டுநிறுவனங்கள் கிரீன் பீஸ், போர்டு பவுண்டேஷன் உள்ளிட்டவை மீது மத்திய அரசு கடும்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சமீபத்தில் மேற்கொண்டது. சட்ட விதிகளை மீறியதற்காக கிரீன் பீஸ் அமைப்பின் உரிமம் ரத்துசெய்யப்பட்டு, அதன் வங்கி கணக்குகளும் முடக்கப் பட்டுள்ளன. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்கதூதர் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, ஆர்கனைசரில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா, தனது நாட்டை சேர்ந்த என்ஜிஓ.,க்களை காப்பாற்ற துடிப்பது ஏன்?. சட்ட விதிமுறையை மீறிய காரணத்திற்காகத் தான் சம்மந்தப்பட்ட என்ஜிஓ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுபோல, அமெரிக்காவில் சட்டத்தை மீறி செயல்பட அந்நாட்டு அரசு விட்டுவிடுமா?.

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை நிதியுதவியாக பெற்று, அவற்றை இந்தியாவில் குறிப்பிட்ட சிலருக்காக பயன்படுத்தி வரும், 9,000 அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பிடியை மத்திய அரசு இறுக்கியது.

எனினும், அமெரிக்காவின் முக்கியமான, போர்டு பவுண்டேஷன் மற்றும் கிரீன்பீஸ் போன்ற அமைப்புகளை மத்தியஅரசு கண்காணிக்கவில்லை. முறைகேடாக செயல்படும் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள்தான் ரத்து செய்யப்பட்டன. இதற்கே அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை. இந்தியாவிடம் விளக்கம் கேட்கப் போவதாக

கூறியுள்ளது.இதுபோன்று, அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தங்களின் வரவு – செலவுகளை மறைத்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமா?

உலகின் ஜனநாயக போலீஸ் காரர் போல நினைத்து கொள்ளும் அமெரிக்கா, பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்தச்செயலை பார்க்கும் போது,அந்த அமைப்புகள், அமெரிக்காவின் உளவு அமைப்புகளோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது .

இந்த சந்தேகத்தை, அமெரிக்காவில் நடத்தப்பட்ட சிலஆராய்ச்சிகள் உண்மை என தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெரிய தொழிற் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும், கிரீன்பீஸ் அமைப்பு, 2010-11ம் நிதியாண்டில் மட்டும், 28 லட்சம் ரூபாயை, வழக்குகளுக்கான கட்டணமாக செலவழித்துள்ளது.உலகம் எங்கும் வியாபித்துள்ள,

போர்டு பவுண்டேஷன் அமைப்பு, 'பெமா' எனப்படும், அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியுள்ளது. நேரடியாகவே, இந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளது. நாட்டின் மத ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சதி செய்துள்ளது.

வருத்தமானதுஇந்த அமைப்புகள் எல்லாம், நாட்டிற்கும், எங்கள் அமைப்பிற்கும் பிடித்தம் இல்லாத செயலில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் இந்த தொண்டு நிறுவனங்களில், 2 சதவீத நிறுவனங்கள் கூட, தங்களின் வரவு – செலவு கணக்கை சமர்பிப்பதில்லை என்பது உண்மையில் மிகவும் வருத்தமானதே.இவ்வாறு, அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.