தங்களிடம் உள்ள உபரிப் பணத்தை வங்கிகளில் முதலீடுசெய்து ஆண்டுதோறும் வட்டி பெறுவதுபோல், நாட்டின் முக்கிய நகரங்களில் வாழும் பொது மக்கள் தங்களிடம் உபரியாக இருக்கும் தங்க நகைகளையும் வங்கிகளில் முதலீடுசெய்து வட்டிபெறலாம் என்ற புதிய திட்டத்தை கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மத்திய அரசு அறிவித்தது. மேலும், தாங்கள் முதலீடுசெய்யும் தங்கத்தின் மீது நகை வியாபாரிகள் கடன் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கத்தை வங்கிகளில் முதலீடுசெய்து பெறும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை மற்றும் மூலதன உயர்வுதொகையில் இருந்து சலுகை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறைந்த பட்சமாக ஒரு நபர் 30 கிராம் தங்கத்தை வங்கிகளில் முதலீடுசெய்யலாம் என அறிவித்துள்ள மத்திய நிதித் துறை அமைச்சகம், இதுதொடர்பான சட்ட முன்வடிவை தயாரிப்பதில் பொது மக்களின் கருத்துகள் வரும் ஜுன் 2-ம் தேதி வரை வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வணிக நோக்கங்களற்று நம் நாட்டில் உள்ள மக்கள் தங்களது பயன் பாட்டுக்கு நகைகளாக வைத்திருக்கும் தங்கம் சுமார் 20 ஆயிரம் டன் இருக்கும் என்றும் இந்த தங்கத்தின் இன்றைய சந்தைமதிப்பு சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply