இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில், கடந்த காங்கிரஸ் அரசு மீது கடும் குற்றச் சாட்டை முன்வைத்தும், பிரதமர் மோடியின் பாஜக அரசை புகழ்ந்தும் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அருண்ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கித்தான் கொண்டு சென்றது. கடந்த கால காங்கிரஸ் அரசுபோல ஊழல்பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. இந்தியாவின் அரசியல் அகராதியில் இருந்து ஊழலை பாஜக அரசு அறவே நீக்கி விட்டது.

கடந்த காங்கிரஸ் அரசின் போலி முதலாளித்துவம்போல இல்லாமல், பொதுமக்களை துன்புறுத்தாமல், அதே வேளையில், நாட்டின் பொருளா தாரத்தை முன்னேற்றும் கொள்கைகளை உருவாக்கி பாஜக அரசு செயல்படுத்திவருகிறது.

மத்திய அரசின் அனுமதிக்காக தொழிலதிபர்கள் யாரும் வெளியே வரிசையில் காத்துநிற்கும் அவலநிலை இப்போது இல்லை. மத்திய அரசின் அலுவலகங்களின் வராண்டாக்கள் தற்போது மிகவும் அமைதியாகவும், காலியாகவும் உள்ளன. பிரதமர் நரேந்திர+-மோடி மூலம் இந்தியா பெருமைப்படுத்தப்பட்டு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply