அநாகரிகமாக விமர்சனம்செய்யும் பாஜக.,வினர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அமித்ஷா அளித்தபேட்டியில், அநாகரிகமாக பேசுகிற பாஜக.,வினருக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இத்தகைய விமர்சனங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

நோட்டீஸ் அனுப்பிபெறப்படுகிற விளக்கங்கள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆராய்ந்து வருகிறது என்றார்.

Leave a Reply