இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் உள்க்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துவருகிறது சீனா. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் குவாடர் துறை முகத்தை மேம்படுத்த சீனா ஒப்புதல்பெற்றுள்ளது. இதனால், அரபிக் கடலில் இந்தியாவிற்கு எதிரான தனது பலத்தை சீன அதிகரித்துள்ளது. .

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பும் பொருட்களை கையாள பாகிஸ்தானும் மறுப்புதெரிவித்து வருகிறது. இந்நிலையில், குவாடர் துறைமுகத் திலிருந்து மிக குறுகியதூரமே உள்ள சாபகார் துறை முகத்தை மேம்படுத்த இந்தியா அனுமதிபெற்றுள்ளது. அவ்வாறு, சாபகார் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தால் பாகிஸ்தானின் தயவின்றி இந்தியபொருட்களை கடல் வழியாக தங்கு தடையின்றி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுசெல்ல முடியும். ஈரான் நாட்டுடன் இருதரப்பு வர்த்தகம் மேம்படவும் இந்த துறைமுகம் பயன்படும்.

இம்மாத துவக்கத்தில் மத்திய அரசு சாப கார் துறைமுகத்தை மேம்படுத்த ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இது பற்றி மத்திய கப்பல் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது; –

சாபகார் துறைமுகத்தில் வேலைகள் துவங்கிவிட்டன. கண்டலா போர்ட் டிரஸ்ட் மற்றும் ஜவஹர்லால் நேரு போர்ட்டிரஸ்ட் இரண்டின் கூட்டு முயற்சியாலும் இந்தபணிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டின் மத்தியிலோ துறைமுகபணிகள் ஆரம்பிக்கப்படும். துறைமுக வேலைகளுக்கு தேவையான கிரேன் இயந்திரங்களை வாங்குவதற்கு டெண்டர்களை அறிவிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த மாதத்திற்குள் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடந்த 2003-லேயே வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் சாபகார் துறைமுகம் சம்பந்தமாக ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது. ஆனால், அது நிறை வேறவில்லை. தற்போது, பிரதமர் நரேந்திர மோடி சாபகார் துறை முகத்தை உருவாக்குவது குறித்து ஆப்கன் அதிபர் அஸ்ரப்கானியிடம் உறுதி அளித்திருக்கிறார். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் திட்டத்தை முறியடிப்பதற்காக இந்தியா இந்ததிட்டத்தில் உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.