மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க. தலைவர் கருணநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார். சென்னை கோபால புரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருணாநிதியின் சகோதரி அண்மையில் மறைந்தது குறித்து துக்கம்விசாரிக்கவே வந்தேன். நடப்பு அரசியல் பற்றியோ, வேறு எந்தவழக்கு விவகாரங்கள் குறித்தோ பேசவில்லை ஜெயலலிதா வழக்கு மேல் முறையீடு பற்றி தற்போது எந்தகருத்தும் கூற முடியாது என்றார்.

Tags:

Leave a Reply