மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனம் சார்பில் 'டி.டி. கிஸான்' என்றபெயரில் விவசாயிகளுக்கான பிரத்யேக தொலைக் காட்சி அலை வரிசையின் ஒளிபரப்புசேவையை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க்கிழமை (மே 26) தொடங்கி வைத்தார்.

அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் உள்ளனர். ஆதலால், கேபிள்சட்டத்தின் கீழ் 'டி.டி. கிஸான்' தொலைக் காட்சியை கட்டாயமாக அனைத்து கேபிள் நிறுவனங்களும், டி.டி.எச். நிறுவனமும் ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்ததொலைக்காட்சி சேவை டி.டி. கிஸான் என்றும் பெயரில் 24 மணிநேர ஒளிபரப்பு சேவையாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் நிகழ்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply