உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, நாடுமுழுவதும் ஜுன் 5-ம் தேதி மரக்கன்று நடும்விழா நடைபெறவுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

கோவை, பீளமேட்டில் ஈஷா பசுமைக்கரங்கள் அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடும்விழாவை, நாற்று பண்ணையில் விதைகள் தூவி தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:

ஜக்கிய நாடுகள் சபை பத்து ஆண்டுகளில் 100 கோடி மரக் கன்றுகளை நடவேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், இந்தியாவில் உள்ள 125 கோடிமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக் கன்றை நட்டால் இலக்கை எளிதாக எட்டிவிட முடியும்.

மத்திய சுற்றுச் சூழல் துறை சார்பில், நகர்ப்புற வனத்திட்டத்தை தேசிய இயக்கமாக நடைமுறைப் படுத்தவுள்ளது. சுற்றுச்சூழலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம் .

தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையோன தண்ணீர்பங்கீடு தொடர்பாக எந்த மாநிலத்திற்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படாது.

அதேநேரத்தில், நாடு முழுவதும் தண்ணீரின் அளவை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மத்திய அரசு வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

டிராய் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள கருத்துகுறித்து காங்கிரஸ் கட்சி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது அவசியம். பாஜக தலைமை யிலான மத்திய அரசின் செயல் பாடுகள், ஏழை, எளிய மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.