பிரதமர் நரேந்திரமோடியின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்ற விமர்சனத்திற்கு மறுப்புதெரிவித்துள்ள மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி மோடி ஒவ்வொருவரின் கருத்தையும் கவனமாககேட்கிறார். ஆனால் அவரது வார்த்தை இறுதியானது என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைக் காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய அவர், கடந்த 10 வருட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை என்பதற்கு மாற்றாக மோடி இருக்கிறார். ஜனநாயகத்தில், எப்பொழுதும் பிரதமரின்வார்த்தை இறுதியானது. நரேந்திரமோடி வலிமையான தலைவர் என்பதை என்னால் மறுக்க முடியாது.

ஆனால், ஒவ்வொரு நபரின் கருத்தையும் பிரதமர் கவனமுடன்கேட்கிறார். ஜனநாயக எதிர்பார்ப்பின்படி, அவரது வார்த்தையே இறுதியானது. அதில் ஒன்றும் தவறு இல்லை. வாஜ்பாய் அரசில்கூட, ஒவ்வொருவரிடமும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பிரதமரின்வார்த்தை இறுதியாக இருந்தது என ஜெட்லி கூறியுள்ளார்.

தி எகனாமிஸ்ட் நாளிதழில் மோடி தனியாகசெயல்படும் நபர் என கூறப்பட்டது குறித்து கேட்கப்பட்டதற்கு அவரை மன்மோகன்சிங்குடன் ஒப்பிட முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக, எந்த அதிகார ங்களும் இல்லாத பிரதமரை நாம் கொண்டிருந்தோம். மன்மோகன் சிங்கின் தனிப்பட்டசெயலாற்றும் திறமைக்காக அவர் எனது விருப்பத்திற் குரியவர். ஆனால், காங்கிரஸ் கட்சி சுதந்திரமாக செயல்பட அவரை அனுமதிக்க வில்லை. அவரது செயலாற்றும் தன்மைக்காக காங்கிரஸ் அவரைபணியாற்ற அனுமதி அளித்து இருப்பின் இந்தியாவின் வரலாறு வேறுவகையில் இருந்திருக்கும்.

உண்மையான அதிகாரத்தை கொண்டிருக்கும் பிரதமரின் முக்கியத்துவத்தை வலியுறுத்திபேசிய அவர், பிரதமருக்கான பதவியளித்துவிட்டு ஆனால் உண்மையான அதிகாரங்களை வழங்க வில்லை எனில், தேசம் இயங்கமுடியாது. பிரதமர் மோடி கடினமுடன் உழைக்கும் தலைவர். அவருடன் பணியாற்று பவர்களும் கடினமுடன் உழைப்பவர்களாக இருக்கவேண்டும் என்பதை ஏற்றுகொள்பவர் என ஜெட்லி கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply