முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவராக இருந்தாலும் மற்றவர்கள் ஊழல்செய்ததை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக குற்றஞ் சாட்டியுள்ளார்.

"த ட்ரிபியூன்" ஆங்கில நாளிதழுக்கு பிரதமர் பேட்டி அளித்துள்ளார். அவரிடம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு நேரடியாக பதில்அளிக்காத மோடி, அரசாங்கத்தின் தலைமைபொறுப்பில் இருக்க கூடிய தான்மட்டும் நேர்மையானவராக இருந்தால் போதாது என்று கூறியுள்ளார்.

ஊழல் விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கும் பிரதமராகிய தான் இடம் அளிப்ப தில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பிரதமர்மட்டுமே நேர்மையாக இருந்துகொண்டு மற்றவர்களை ஊழல்செய்ய அனுமதிப்பது சிறப்பான அரசுக்கு எடுத்துக் காட்டாக இருக்காது என்றும் மோடி கூறியுள்ளார். கருப்புபணம் உருவாக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கருப்புபண விவகாரத்தில் மத்திய அரசை குறைசொல்ல எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கும்வரை கருப்புபணம் பதுக்கியுள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply