நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதே மோடி அரசின் லட்சியம் என மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

மத்திய அரசின் ஓராண்டுகால ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது. மக்களின் எதிர் பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

நகர வாழ்க்கை ஏழைகளுக்கு அனுகூலமாக இல்லை.ஏழைகளின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்த வேண்டும். கிராமங்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கச் செய்யவேண்டும். ஏழ்மையை முற்றிலுமாக ஒழிப்பதே மோடி அரசின் பிரதான லட்சியம்.

ஏழைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, வீடுகட்டும் திட்டம், ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதல் போன்ற பணிகளை தொடங்க உள்ளோம். வரும் 2020-ம் ஆண்டுக்குள் ஏழைகள் அனைவருக்கும் சொந்தவீடு கட்டித்தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளோம். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply