அரசியல் கட்சிகளின் சூழ்சிகளுக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் பலியாகி விட வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்ட அறிக்கையில், ''ஐஐடி பெயரை பயன் படுத்தி தங்கள் சொந்த கருத்துகளை வெளியிட்டதாலும், நாட்டின் தலை வர்களை இழிவு படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் சென்னை ஐஐடியில் செயல்பட்டு வந்த மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதை சென்னை ஐஐடி இயக்குநர் சிவகுமார் சீனிவாசன் தெளிவுபடுத்தியுள்ளார். தன்னாட்சி நிறுவனமான சென்னை ஐஐடி, சூழ் நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால், இதற்கு மத்திய அரசு காரணம் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கல்விவளாகத்தை அரசியல் வளாகமாகமாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு ஐஐடி மாணவர்கள் பலியாகிவிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் நடத்தவேண்டாம் என அரசியல் கட்சிகள், இயக்கங்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

மாணவர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எந்த தடையும் இல்லை என ஐஐடி நிர்வாகம் தெளிவு படுத்தியுள்ளது. அங்கு பல அமைப்புகள் தொடர்ந்து செயல் படுகின்றன. கருத்து பரிமாற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், இந்த சூழ்நிலையை பயன் படுத்தி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி போன்றோர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்து கருத்துரிமையின் கழுத்தைநெரித்தவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கல்விநிலையங்களில் அரசியல் தூண்டுதல், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply