ரூபாய் நோட்டு அச்சடிக்க பயன் படுத்தப்படும் தாள் உற்பத்தி ஆலையை, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மத்திய பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். மத்திய பிரதேசத்தில் ரூபாய் நோட்டுக்கான தாள் தயாரிக்கும் செக்யூரிட்டி பேப்பர்மில்லை மத்திய பிரதேச மாநிலம் ஓசங்காபாத்தில் தொடங்கிவைத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''மேக் இன்இந்தியா திட்டப்படி இந்த மில். துவக்கப் பட்டுள்ளது. குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களுக்கான தாள்கள் இங்கு தயாரிக்கபடும்.

தற்போது அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கான தாள்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எதிர் காலத்தில் இந்த தாள்களும் உள் நாட்டிலேயே தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அடுத்ததாக மைசூரில் ஆண்டுக்கு 12,000 டன் ரூபாய் நோட்டுதாள் தயாரிக்கும் மில் இந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட உள்ளது'' என்றார். ஓசங்காபாத்தில் துவக்கப்பட்டுள்ள ஆலை ஆண்டுக்கு 6,000 டன் தாள்தயாரிக்கும் திறன் கொண்டது.

Leave a Reply