கேரளமாநிலம் கொச்சியில் 1000 ஆண்டு பழமையான சேரமான் ஜூம்மா மசூதி உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான இந்தமசூதியை புனரமைக்கும் பணிகள் நடந்துவந்தது. கேரள சுற்றுலாத் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு நடந்துவந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்த மசூதியை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப் பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் பிரதமர் மோடி கேரளா வந்து ஜூம்மா மசூதியை திறந்துவைப்பார் என்று கேரள சுற்றுலாத் துறை செயலாளர் கமலா வர்த்தனராவ் தெரிவித்தார்.

இந்தமசூதி கி.பி. 629–ம் ஆண்டு மாலிக்பின் தினார் என்பவரால் கட்டப்பட்டது. கொடுங்கலூரை ஆண்டுவந்த சேரமான் பெருமாள் என்பவர் முஸ்லீம் மதத்திற்கு மாறியபின்பு அவர் இந்த மசூதியை கட்டியதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து முஸ்லீம் கல்வி கழக நிர்வாகி ஒருவர் கூறும் போது பிரதமர் மோடி இங்கு வருகைதருவதை வரவேற்கிறோம். பாஜகட்சியின் வழக்கமாக நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு பிரதமர் இங்கு வருவது மிகவும் மகிழ்ச்சியைதரும்' என்றார்.

பிரதமர் மோடி கேரளா வரும் பட்சத்தில் கொடுங்கலூர் உன்னிக்குட்டன் தம்புரான் நினைவு அரசுகல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மோடி ஜூம்மா மசூதிக்கு வரும் போது கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில் மற்றும் புனித தாமஸ் தேவலாயத்துக்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply