தேமுதிக தலைவர் விஜய காந்த் கடந்த 27.04.2015 அன்று பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், ரிஷி வந்தியம் தொகுதியில், திருவண்ணாமலை-தியாக துருகம் சாலையில், மணலூர் பேட்டை அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம்கட்ட, மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அந்த கோரிக்கையை பிரதமர் மோடி கனிவுடன் ஏற்றுக்கொண்டார். அதன்பயனாக, மத்திய அரசின் சாலை மேம்பாட்டு திட்டநிதியிலிருந்து, அங்கு உயர்மட்ட பாலம்கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உயர்மட்ட பாலம் கட்டப்பட்டால், அதன் மூலம், திருவண்ணா மலையிலிருந்து திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆயிரக் கணக்கான வாகனங்களும் மற்றும் பொது மக்களும் மிக எளிதில் சிரமம் இன்றி செல்லவாய்ப்பாக அமையும்.

எனவே, இந்தகோரிக்கையை உடனே ஏற்று, பாலம்கட்ட அனுமதியும், நிதியும் ஒதுக்கி தந்த பிரமதர் நரேந்திர மோடிக்கு, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இதய பூர்வமான நன்றியை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply