மத அடிப்படையில் மக்களைபிரிக்கும் அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெரும்பான்மை, சிறுபான்மை அரசியல் நாட்டுக்கு பெரும்சேதத்தை ஏற்ப்படுத்துகிறது.

மதவாத அடிப்படையில் மக்களைபிரிக்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை. மதவாத மொழியில் ஒரு போதும் பேசப் போவதும் இல்லை. சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதும், அவர்களை மேம்படுத்துவதும் தான் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு. இதை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்காக, இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது என பிரதமர் கூறினார்.

அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் இமாம் உமர் அகமது இலியாஸி தலைமையில், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, பிரதமர் பேசியது.

Leave a Reply