ஆர்கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டால் பாஜக ஆதரிக்கும் என டெல்லியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன், "மிஸ்டுகால் மூலம் தமிழகத்தில் சுமார் 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம். தமிழகத்தை பொறுத்த வரை தற்போதும் 2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்தகூட்டத்தில் நாங்கள் எடுத்துரைத்தோம்.

சென்னை ஐஐடியில் ஒருமாணவர் அமைப்பு தடைசெய்யப்படுவது அந்த ஐஐடியின் முதல்வர் எடுக்கக் கூடிய நிர்வாகம் சார்ந்த முடிவு. மாணவர்கள் இடையில் பிரிவினை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை யாகத்தான் தோன்றுகிறது. இதனை அரசியலாக்கக் கூடாது. இதை அரசியலாக்கி அத்தனை அரசியல் கட்சிகளும் அந்த ஐஐடி வளாகத்தில் போராட்டத்தை நடத்தி அரசியல் செய்கிறார்கள்

ஆர்கே.நகர் இடைத் தேர்தலைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிகட்சி தலைவர்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம். தேமுதிகவினர் தங்கள் வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் எங்கள் கூட்டணி வேட்பாளராகத்தான் இருப்பார். பாஜக அந்தவேட்பாளரை ஆதரிக்கும்" என்றார்.

Tags:

Leave a Reply