அம்பேத்கார் பெரியார்வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்ட பிரச்சனையில் அரசியல் கட்சியனரின் பகடைகாயாக ஐஐடி மாணவர்கள் மாறிவிட கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மாணவர்கள் படிப்பில் கவனம்செலுத்தி சாதனை படைக்க வேண்டும் .சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிதொகை போல், ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவிதொகை வழங்க பிரதமர் மோடி மற்றும் கல்வி அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது . இது குறித்த திட்டம் விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

சென்னை ஐஐடி மாணவர்கள் சார்பில் செயல்பட்டு வந்த அம்பேத்கார், பெரியார் வட்டத்துக்கு தடைசெய்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த பிரச்சனையில் அரசியல் கட்சியனரின் பகடைகாயாக மாணவர்கள் மாறிவிட கூடாது.

மாணவர்கள் படிப்பில் கவனம்செலுத்தி சாதனை படைக்கவேண்டும். மாணவர்களின் சமூக நலன், கருத்து, சமூகநீதி ஆகியவற்றிக்கு எதிராக மத்திய அரசு ஓருபோதும் தலையிடாது .

இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் இயற்கையாக அமைந்துள்ளது குளச்சல்துறைமுகம். மத்திய அரசு குளச்சலில் துறைமுகம் அமைக்க ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணி விரைவில் நிறைவடையும். இங்கு துறைமுகம் அமையும்பட்சத்தில் தென்மாவட்டங்கள் வளமடையும்.

பாஜக அரசு புதிய நீர்வழி திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணி உள்பட 101 நதிகள் இந்ததிட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. புதியமோட்டார் வாகன சட்டம் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஏற்றுகொள்ள வேண்டும். பாஜக ஓராண்டு ஆட்சியில் இலங்கையில் இருந்து 900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.

Leave a Reply