ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நவீன நகரங்கள் திட்டத்தை வரும் 25ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைக்கிறார்.

நாடுமுழுவதிலும் 100 ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் 500 நகரங்களை புதுப்பிக்க மத்திய அரசு 98 ஆயிரம்கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடிவுசெய்து இருக்கிறது.

முதல்கட்டமாக 20, 2-வது கட்டமாக 40, 3-வது கட்டமாக 40 என மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களை படிப் படியாக அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த 2 திட்டங்களையும் வருகிற 25ந் தேதி பிரதமர் மோடி டெல்லி விஞ்ஞானபவனில் தொடங்கிவைக்கிறார்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை ஸ்மார்ட்நகரங்கள் மற்றும் அம்ருத் நகரங்கள், அவற்றிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் பிரதமர் மோடி அறிவிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply