இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை நீண்டகால சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தமழை அளவு குறைபாட்டை போக்குவதற்கு பண்ணை குட்டைகளை அமைக்கவேண்டும்.சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என

பிரதமர் மோடி டெல்லியில் கூறினார். தலை நகர் டெல்லியில் விவசாயிகள் நலன் சார்பிலான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, இந்த ஆண்டு பருவ மழை சராசரி அளவைக் காட்டிலும் குறைவாகபெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வழக்கமான அளவைகாட்டிலும் குறைவாக மழைபெய்தாலும் அத்தகைய சவால்களை வாய்ப்புகளாக அதிகாரிகள் மாற்றவேண்டும். பாசனத் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, நிதி ஏற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப செயல் பாடுகள் ஆகியவற்றை மறுபார்வையிட வேண்டும். நாடுமுழுவதும் பண்ணை குட்டைகளை அமைப்பதற்கு குறுகியகால முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பாசனவசதி திட்டங்களை மாவட்ட அளவில் செய்யவேண்டும். இதற்கான கருத்துருக்களை சிவில்சர்வீஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டும்.சிலமாநிலங்களில் நிலத்தடி தண்ணீர் அளவு குறைந்துள்ளது.இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply