ஐ.நா.சபை அறிவித்தபடி வருகிற 21–ந் தேதி உலகயோகா தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி நாடுமுழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய–மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இதில் முக்கிய அம்சமாக டெல்லி ராஜ பாதையில் சுமார் 40

ஆயிரம்பேர் பங்கேற்கும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், ஆன்மிக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு யோகா செய்கிறார்கள். இதில் கலந்துகொள்ளுமாறு 152 வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.எனினும் எத்தனை தூதர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என உறுதியாக தெரியவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.

Tags:

Leave a Reply