தே.ஜ., கூட்டணி, மத்தியில் ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவை யொட்டி, மைசூருவில் நடக்கவிருந்த மாநாடு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாநாட்டை, நரகுந்தாவில் நடத்த பாஜக., தீர்மானித்துள்ளது.

பாஜக., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, ஹூப் பள்ளி, மைசூருவில் பிரம்மாண்டமாநாடு நடத்த, கர்நாடக பாஜக., தீர்மானித்திருந்தது. விரைவில், பீகார் சட்ட சபைத் தேர்தல் நடக்கவுள்ளதாலும், இம்மாத இறுதியில், மத்திய அமைச்சரவை விரிவுப்படுத்தப் படுவதாலும், டில்லியில் மேலிடளவில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச சுற்றுப் பயணத்தை முடித்து டில்லி திரும்பியதும், பீகார் சட்டசபைத் தேர்தல், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்தசந்தர்ப்பத்தில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும் பங்கேற்பார் என, தெரிகிறது. இதனால், இன்று, ஹூப்பள்ளி, மைசூருவில் நடத்தப்படவிருந்த மாநாட்டை, பா.ஜ., ரத்துசெய்தது.

இது மட்டுமின்றி, மாநிலத்தின் பல இடங்களில் பருவ மழை பெய்து வருவதால், விவசாயிகள் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இப்போது, மாநாடுநடத்தினால் அவர்களால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகலாம். இதை மனதில்கொண்டும், இம்மாநாட்டை, பா.ஜ., ரத்துசெய்ததாக கூறப்படுகிறது.இந்தமாநாடு, வரும் 23ம் தேதி நடக்கும்; மேலும், மாநாடு நரகுந்தாவுக்கு இடமாற்றப்பட்டு உள்ளது என்று, பாஜக., வட்டாரம் தெரிவித்துள்ளது.

Leave a Reply