நாடுமுழுவதும் நெஸ்லே உள்ளிட்ட 7 நிறுவனங்கள் வெளியிடும் பாக்கெட்டுகளில் அடைக்கபட்ட துரித உணவு பொருட்களின் தரத்தை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய, மாநில அரசுகளுக்கு மத்திய உணவுபாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் காரீயம் கலந்த பிரச்சனையை தொடர்ந்து, நூடுல்ஸ் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரெடிமேட்துரித உணவுகள் மீது நுகர்வோருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதனை கருத்தில்கொண்டு நாடுமுழுவதும் நூடுல்ஸ் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கும் நெஸ்லே இந்தியா, ஐ.டி.சி, இந்தோ நிஸ்ஸின் புட், ஜிஎஸ்கே. கன்ஸ்யூமர் ஹெல்த்கேர், சி.ஜி. புட்ஸ் இந்தியா, ருச்சி இன்டர்நேஷனல் மற்றும் ஏ.ஏ. நியூட்ரிஷியன் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன. அந்த 7 நிறுவனங்களும் விற்பனைக்கு அனுப்பியுள்ள உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப் படையில் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு முடிவுசெய்ய திட்டமிட்டுள்ளது.

Tags:

Leave a Reply