தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஏறு தழுவுதல் என்று கூறப்படும் ஜல்லிக்கட்டு பொங்கல்திருவிழா நாட்களில் மதுரை, சேலம்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம். காளைகளை அடக்கும் வீரவிளையாட்டாக பாரம்பரியமாக நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு. இந்தநிகழ்ச்சிக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்புதெரிவித்தனர். தமிழகத்தில் இது பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தடைகாரணமாக இந்த ஆண்டு தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு பிரியர்கள் ஏமாற்ற மடைந்தனர். தமிழக அரசு சார்பிலும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கதேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் தடைநீங்குவதாக தெரியவில்லை.

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தடைக்கு காரணமாக இருக்கும் தடைசெய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கான சட்டதிருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply