வெளிநாட்டில் கறுப்புபணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய காங்கிரஸ் அமைச்சர் பெயரும் இடம்பெற்று இருப்பது அக்கட்சி வட்டாரங்களில் அதிர்வு அலைவுகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளியுறவு இணைஅமைச்சராக இருந்தவர் ப்ரநீத்கவுர் இவர் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளிநாடுகளில் கறுப்புபணம் பதுக்கி உள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

ப்ரநீத் கவுர் குடும்பத்தினர் பெயரில் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் உள்ளன. அத்துடன் லண்டன் மற்றும் துபாயில் சொத்துக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ப்ரநீத் கவுரும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களும் வரி ஏய்புநடத்தி ஜெனிவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் கறுப்புபணம் முதலீடு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கறுப்புபணம் பதுக்கி உள்ளதாக வருமான வரித்துறை துறை வெளியிட்டுள்ள 1195 பேர் பட்டியலில் ப்ரநீத் கவுரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்த தகவல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கறுப்பு பணம் பதுக்கல் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பதுக்கல்காரர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply