"அவிஜித் ராய்" – மத சார்பற்ற எழுத்தாளர். அதாவது தன் கருத்துக்களை மதபாகுபாடு பார்க்காமல் தெரிவிப்பவர். வங்கதேசம், டாக்காவில் பிறந்த இவர், இஸ்லாமையும் விமர்சிப்பவர்.! அதாவது, இந்து மதத்தை தூற்றிவிட்டு, மற்றவர்கள் மட்டும் ஆதரிப்பவர் அல்ல!

இவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். சுதந்திரமான கருத்துக்களும், பேச்சு மற்றும் எழுத்துரிமை வேண்டும் என தனது இணையதளமான "முக்த மோனா" ("சுதந்திர மனம்") வில் எழுதியிருப்பவர்.

வங்க தேசத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு இந்தியாவில் அடைக்கலமாகி இருந்து பின்னர் தானாகவே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த வங்க எழுத்தர் "டாக்டர் தஸ்லீமா நஸ்ரூதின்" அவர்களை பாரட்டி கவிதை ஒன்றை எழுதினார் அவிஜித்ராய். இதன் விளைவாகவே இவர் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறிவைக்கத் தொடங்கினார்கள்! தனக்கு பாதுகாப்பு வேண்டும் என வங்கள தேச அரசிடம் பல முறை இவர் கேட்டிருந்தார்.

அமெரிக்காவில் வசித்து வந்த அவிஜித்ராய் தன் சொந்தநாட்டின் தலைநகர் டாக்காவிற்கு ஒரு புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்காக தன் மனைவியுடன் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது "மாடு வெட்டும் இறைச்சி கத்திகளால்" நட்ட நடு கூட்டத்திற்குள்ளே தலை சீவப்பட்டு கொல்லப்பட்டார்!

இவருக்கு ஆதரவாக இந்திய எழுத்தர் உலகம் என்ன செய்தது?

இந்திய பேச்சு, கருத்து சுதந்திர "கும்பல்" –இல்லை இல்லை …….. கோமேதகங்கள் என்ன செய்தது?

சென்னை ஐ.ஐ.டி-யின் கருத்து சுதந்திரத்திற்காக பக்கம் பக்கமாக எழுதிய "இந்துவும்" மதசார்பற்றவர்களும் என்ன செய்தார்கள்?

ஒரு "குருவி சத்தம் கூட" கேட்கவில்லை.

காரணம் கருத்து சுதந்திரம் இந்தியாவில் மட்டுமே எடுபடும் இந்துக்களிடம் மட்டுமே எடுபடும்…

எவ்வளவு எதிர்ப்பு குரல் எழுப்பினாலும் "உயிர்க்கு உத்தரவாதம் உண்டு"
மற்ற நாடுகளில்– மற்ற மதங்களில் "பணால்" தான்..
…………. ………… ……………….
"ரைஃப் பதாவி"–யார் இவர்?–பெய்ரை படித்தவுடனேயே இவர் ஒரு முஸ்லீம் என்பது தெரிகிறது..சௌதி அரேபியாவில் "ஜெட்டாவில்" வசிப்பவர்..சுதந்திரமாக இணைய தளத்தில் எழுதி வந்தவர்..

2012 ஆம் அண்டு சௌதி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்..எதற்காக?–பேச்சுரிமை–எழுத்துரிமை—கருத்து சுதந்திரத்தை போற்றும் வகையில் இணைய தளத்தில் எழுதியமைக்காக…………

கம்யூனிச நாடுகளில் அரசுக்கெதிராக கருத்தி தெரிவித்தால்–"பாட்டாளி வர்க்க விரோதி" என சீல் குத்தப்பட்டு..தூக்கில் ஏற்றிவிடுவார்கள்..
அதுபோல இஸ்லாமிய நாடான சௌதியிலும், "ரைஃப் பதாவியை"–"எலக்ட்ரானிக் மீடியா மூலம்–இஸ்லாமை அவமதித்தார்"–என குற்றம்சாட்டி 100 கசையடி–மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளார்கள்..

ரைஃப் பதாவிக்கு இந்தியாவின் பேச்சுரிமை–கருத்துரிமை நாயகர்கள் எத்தனை பேர் ஆதரவு குரல் கொடுத்தார்கள்?

ஐ.ஐ.டி–யில் கருத்துரிமைக்காக கழுத்து வலிக்க கத்திய "இந்துவும்"–இடதுசார்களும், ரைஃப் பதாவியை ஏன் கண்டுகொள்ளவில்லை?–

"ஓட்டா"?–அல்லது உயிருக்கு "வேட்டு" வந்துவிடும் என்கிற அச்சமா?–

பாவம் பதாவியின் மனைவி "இன்சாஃப் ஹைதர்"தான் மிகுந்த கவலையில் உள்ளார்..இனி மேல் முறையீடே இல்லை என்பதால்—"எனக்கு வழி ஏதும் தெரியவில்லையே?"என மன உளைச்சலில் கண்ணீர் வடிக்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி.க்காக வெகுண்டு எழுந்தவர்களில்..யாரவது " ஒரு ஆம்பிள்ளையாவது "–ரைஃப் பதாவியின் மனைவி இன்சாஃப் ஹைதரின் கண்ணீர் துடைக்க—-அவிஜித் ராயின் ஆத்மா சாந்தியடைய –ஆதரவு குரல் எழுப்புவார்களா?.

 

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.