வருமான வரிவிலக்கு பெறும் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வரும்பணத்தை முறையாக செலவுசெய்கின்றவா என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்பணியில் ஈடுபடுமாறு வருமான வரித் துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள், ஏழைகளுக்கு உதவ தொண்டுநிறுவனம், அறக்கட்டளைகள் மத்திய அரசின் அனுமதியோடு வரிவிலக்கும் பெற்று துவங்கப்படுகின்றன. அறக் கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும்பணத்தை முறையாக செலவுசெய்யாமல் வியாபார நிறுவனங்களாக மாறிவருகின்றன என்று மத்திய அரசுக்கு புகார்சென்றுள்ளது.

வெளிநாட்டு நிதிபெற்று முறைகேடாக செயல்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் குறித்து மத்திய அரசுக்கு புகார்சென்றது. இதையடுத்து விசாரணை நடத்தி அவற்றின் நிதி ஆதாரங்கள் முடக்கி வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில்தான் அறக்கட்டளைகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளது மத்திய அரசு. மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி வரிகள் வாரியம் வரித்துறை அதிகாரிகளுக்காக தயார் செய்துள்ள அறிவுரை அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Leave a Reply