திராவிட இயக்கத்தை சார்ந்து வரும் தமிழக அரசியல் கட்சிகளை கருணாநிதியும் வைகோவும் அழித்து விடுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எத்தனை பிரளயங்கள் வந்தாலும் திராவிடஇயக்கம் அழியாது என்று திரு. வைகோ கூறியதையும் திராவிடக் கட்சிகளை வெளிச்சக்திகள் சில அழிக்கமுயல்வதாக திரு. கருணாநிதி சொன்னதையும் நினைவு கூர்ந்தார் திரு ராதாகிருஷ்ணன். அவர்கள் இருவரும் இருக்கையில் திராவிட இயக்கத்தை அழிக்க மற்றசக்திகள் தேவையில்லை என்று வன்மையாகச் சாடியிருக்கிறார்.

Leave a Reply