வெளிநாட்ட வர்களின் தாக்கத்தால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில் பலஉயர்ந்த தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

சையத்சலார் மசூத் என்ற மொகலாய மன்னரை இந்திய அரசர் சுஹேல்தேவ் வெற்றிகண்ட நாளின் நினைவாக உத்தரப் பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

நம் நாட்டின் வரலாறு வெளிநாட்ட வர்களின் தாக்கத்தால் எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தை காக்கவும் போராடி, சமூகத்துக்காக அனைத்தையும் துறக்கதுணிந்த உயர்ந்த தலைவர்களும், உயர்ந்த மனிதர்களும் இந்தவரலாற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நமது நாட்டில் உள்ள வரலாற்றா சிரியர்கள் இதுதொடர்பாக ஆராய்ச்சிகளை செய்து, அத்தகைய தலைவர்களுக்கு இனியாவது வரலாற்றில் கவுரவத்துகுரிய சரியான இடம்கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களின் வாழ்க்கையில் இருந்து எதிர்கால தலை முறையினர் உரிய ஊக்கத்தை பெற இந்த புதியவரலாறு உதவிகரமாக அமையும்.

உயர்ந்த தலைவர்களில் யாரும் எந்தமதத்துக்கும் சொந்தமானவர்கள் அல்ல. அவர்களை மதங்களின் பெயரால் அடையாளப்படுத்த கூடாது. அவர்கள் ஊக்கத்துக்கான மூலாதாரமாக திகழ்பவர்கள். இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானவர்கள் என்று அவர் கூறினார்.

Leave a Reply