சூரிய நமஸ்காரம் ஒன்றும் மதம்சார்ந்தது அல்ல , அது யோகாவின் ஒரு ஆசனம் , நமாஸில்கூட அதேபோன்ற அசைவுகள் உள்ளது என்று பாஜக தலைவர் வாசுதேவ் தேவ்னானி தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகாதினம் வரும் 21ம் தேதி கொண்டாடபடுகிறது. அதில் சூரியநமஸ்காரம் இருப்பதற்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இதையடுத்து யோகா தின கொண்டாட்ட கழ்ச்சிகளில் இருந்து சூரிய நமஸ்கார நிகழ்ச்சியை மட்டும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்நிலையில் சூரிய நமஸ்காரம் குறித்து பாஜக தலைவரும், ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சருமான வாசுதேவ் தேவ்னானி கூறுகையில்,

சூரிய நமஸ்காரம் என்பது எந்த ஒருமதத்தையும் சேர்ந்தசெயல் அல்ல. அது யோகாவின் ஒரு ஆசனம். அப்படி இருக்கையில் அதை மதத்துடன்சேர்த்து பார்க்கக் கூடாது.

முஸ்லீம்களின் நமாஸில்கூட சூரிய நமஸ்காரம் போன்ற அசைவுகள் உள்ளன. ஏராளமான முஸ்லீம் நாடுகளில் வசிக்கும் மக்கள் சூரியநமஸ்காரம் செய்து வருகிறார்கள்.

முஸ்லீம்கள் சூரிய நமஸ் காரத்தை எதிர்ப்பதற்கு காரணம் குழப்பம். முஸ்லீம் சமுதாயத்தில் நிலாவை வைத்து சிலசடங்குகள் உள்ளன. நிலாவும், சூரியனும் சமமானது. நீங்கள் நிலாவை கொண்டாடும் போது சூரியனை மட்டும் ஏன் வெறுக்கவேண்டும்?

சூரிய நமஸ்காரம் என்றால் வெளியேவந்து சூரியனை பார்த்துதான் செய்யவேண்டும் என்றில்லை . உங்கள் அறையில் இருந்து கொண்டே சூரியனை பார்க்காமலே சூரியநமஸ்காரம் செய்யலாம். அந்த ஆசனத்திற்கு பெயர் மட்டும்தான் சூரிய நமஸ்காரம்.

சிலர் அரசியல் நோக்கத்துடன் முஸ்லீம்களை சூரிய நமஸ்காரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தவறாக வழிநடத்தி வருகிறார்கள். இந்துத்துவம் என்பது மதம் அல்ல வாழ்வின் ஒருவழி என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் சூரிய நமஸ்காரம் எப்படி மதசெயல் ஆகும் என்றார் தேவ்னானி.

Leave a Reply