தமிழகத்தில் காசநோய் உதவித் தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தி கவலை அளிக்கிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6 மாத காலமாக இவர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய், நிதிப் பற்றாக்குறை காரணமாக வழங்கப்படவில்லை என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், காச நோயைப் பொறுத்தமட்டில், வெறும் சிகிச்சை மட்டும் முக்கியமல்ல. அத்துடன் அவர்கள் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவை மேற்கொள்வதுதான் நோயை கட்டுப்படுத்துவதுடன் மேலும் பரவாமல் தடுக்கும்.

அதுமட்டுமல்ல, சத்துணவு உட்கொள்ளவில்லை என்றால், அவர்கள் இந்த காச நோயுடன் மேலும் பல தொற்று நோய்கள் ஏன் புற்று நோய் போன்ற நோய்கள் தாக்குவதற்கும் காரணம் ஏற்பட்டுவிடும். அதனால், உடனே அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்க உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் காச நோய் என்பது ஒவ்வொரு நிமிடமும் சரியானக் கட்டுபாடில்லை என்றாலும், பல உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை என்றாலும் பல தொல்லைகளை உருவாக்கக் கூடியது. அதனால், சிறிதும் கால தாமதம் செய்யாமல் இந்த உதவித்தொகையை அளிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சர் போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு "காசு நோய்" பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் "காச நோய்"; தாக்கம் ஏற்பட்டிருக்கும் மக்களுக்கு இன்னும் காசு போய் சேரவில்லை நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது மன்னிக்க முடியாதது. அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.