தமிழ்நாட்டில் ய+ரியா உர உற்பத்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். சென்னை மணலியில் உள்ள எம்.எப்.எல் உர நிறுவனமும், தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனமும் நாப்தா இருக்கும் வரை அதை மூலப் பொருளாகக் கொண்டு ய+ரியா உரம் தயாரிப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த கோரிக்கையை விவசாயிகள் நலன் கருதி தமிழக பாரதிய ஜனதா கட்சி முன்வைத்திருந்தது. இன்று அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இதற்கான உத்தரவை மத்திய ரசாயண உரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார் பிறப்பித்துள்ளார். அவருக்கும், நம் பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல் சர்க்கரை ஆலைகளுக்கு 6,000 கோடி வட்டியில்லாக்கடன் வழங்கியிருப்பதும் ஆறுதல் அளிக்கிறது. இதற்கு முன் இப்படி ஒதுக்கிய பணம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை, சர்க்கரை ஆலைகள் அதை வேறு வகையில் முதலீடு செய்து கொள்கிறார்கள் என்று பலர் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

ஆனால் திரு. மோடி அவர்கள் ஆட்சியில் உண்மையாகவே விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதால் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணம் ஜன்தன் திட்டத்தின் மூலம் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதே போல் தூத்துக்குடி என்.எல்.சியில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் 219.51 மெகாவாட்டிற்கு மேல் கூடுதலாக 26 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்ற செய்தி மத்திய அரசு தமிழகத்தை ஒளிமயமாக்க எடுத்தும் கொள்ளும் அக்கறையில் ஓர் பகுதி என்ற வகையில் அதற்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

இப்படி தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசு உள்ளது என்பதையும், இதற்கு முந்தைய ஆட்சியில் பெரும்பாலும் தமிழகம் புறக்கணிப்பட்டது என்பதையும் அனைவரும் அறிவர். ஆக பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதை பல்வேறு திட்டங்கள் மூலமும் நமக்கு உறுதி செய்து வருகிறது. மேலும் எல்லா வகையிலும் தமிழகம் பலன் பெறும் என்றும் நமக்கு நம்பிக்கையை மோடி அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Tags:

Leave a Reply